பாகல்பூர் (பிகார்): பிகார் மாநிலத்தில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறி வாளால் தாக்கி சண்டையிட்டபோது அருகிலிருந்த அவர்களது மூன்று வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த தம்பதிகள் மற்றும் குழந்தைகள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகல்பூர் மாவட்டத்தின் பிஹ்பூர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சோன்பர்சா கிராமத்தில் பூபேந்திர தாஸ் (30) மற்றும் ஆர்த்தி தேவி (26) என்ற தம்பதியனர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஜன் குமார்(4), பல்வீர் குமார்(3) என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் மற்றும் அர்னிகா குமாரி(6) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதியனருக்கு இன்று (நவ-3) காலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் வாளால் தாக்கியுள்ளனர். இதில் அருகிலிருந்த அவர்களது குழந்தைகள் மீதும் காயம் ஏற்பட்டது.
அருகிலிருந்தவர்கள் தம்பதியினரையும், குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியிலேயே மூன்றாவது குழந்தை பல்வீர் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க:உதகை குடியிருப்புப்பகுதியில் பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி; மக்கள் பீதி