ETV Bharat / bharat

'நிர்ணயத்த இலக்குகளைவிட அதிகமாகவே சாதித்துள்ளோம்' - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் - பிரகாஷ் ஜவடேகர் தற்போதைய செய்தி

டெல்லி: பருவநிலை மாற்றம் குறித்த போராட்டத்தில் இந்தியா நிர்ணயித்த இலக்குகளைவிட அதிகமாகவே சாதித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Prakash Javadekar
Prakash Javadekar
author img

By

Published : Dec 17, 2020, 2:49 PM IST

இந்திய கைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட வெபினாரில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் என்பது வெறும் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்துள்ளது.

தற்போதுகூட 130 கோடி பேர் இருக்கும் நம் நாட்டிலிருந்து வெளியேறும் கரியமில வாயு வெறும் ஏழு விழுக்காடாக மட்டுமே உள்ளது. இந்தியா இதில் நிர்ணயத்த இலக்குகளைவிட அதிகமாகவே சாதித்துள்ளது. இது நாம் சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை சொல்வதை செய்கிறோம் என்பதற்கு சாட்சியாக உள்ளது.

உலகின் மற்ற நாடுகள் தங்கள் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, மற்ற நாடுகள் தங்கள் இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதை நான் தவறான ஒரு அணுகுமுறையாகவே பார்க்கிறேன்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அனைத்து நாடுகளும் அடைந்தாலே போதும். 2023ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச நாடுகள் கூடும்போது இலக்குகளை மாற்றியமைப்பது குறித்து சிந்தித்துக்கொள்ளலாம்.

2030ஆம் ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை 35 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நாம் கரியமில வாயு வெளியேற்றத்தை 21 விழுக்காடு குறைத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஆடைகளை மாற்றலாம், கொள்கைகளை மாற்ற முடியாது - மம்தா பானர்ஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.