ETV Bharat / bharat

‘எதிர்கட்சிகள் எதையும் செய்தது இல்லை; மற்றவர்களையும் எதையும் செய்ய விடுவது இல்லை’- பிரதமர் மோடி! - சர்தார் வல்லபாய் படேலின் சிலை

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் எதையும் செய்தது இல்லை ; மற்றவர்களையும் எதையும் செய்ய விடுவது இல்லை- பிரதமர் மோடி!

author img

By

Published : Aug 6, 2023, 8:01 PM IST

டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள 508 ரயில் நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பிரதமர் மோடி, விர்சுவல் முறையில் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி தரும் பொருட்டு, அம்ரித் பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சகல வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. இந்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டு உள்ள ரயில் நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்திய ரயில்வேயில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்யும் பணிகளுக்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது, நாட்டில் இருந்து ஊழல், குடும்ப ஆட்சி உள்ளிட்டவைகள் வெளியேற வேண்டும் என்று எதிர்கட்சிகளின் INDIA கூட்டணியை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ள அவர், நாட்டின் நலனுக்காக, எதிர்கட்சிகள் எதையும் செய்வது இல்லை, மற்றவர்களையும் செய்ய விடுவது இல்லை.

வெள்ளையனே வெளியேறு என்ற ஒற்றை முழக்கத்தை எதிரொலித்த நம் நாட்டில், தற்போது, ஊழல், குடும்ப ஆட்சி அல்லது வாரிசு அரசியல் உள்ளிட்டவை வெளியேற வேண்டும் என்பதே, முக்கிய தேவையாக உள்ளது. தாங்களும் எதையும் செய்ய மாட்டோம், மற்றவர்களையும் எதையும் செய்ய விடமாட்டோம் என்ற கொள்கையின் அடிப்படையில், எதிர்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, குஜராத் மாநிலத்தில் மிகப் பிரமாண்டமாக, அதே சமயம் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் அமைக்கப்பட்டு, உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை, எதிர்கட்சி தலைவர்கள் ஒருவர் கூட இதுவரை சென்று பார்க்கவில்லை. அதேபோல், புதிய நாடாளுமன்ற கட்டடம், கார்தவ்யா பாதை உள்ளிட்ட திட்டங்களையும், எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்து உள்ளனர். நாட்டை, 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், நாட்டிற்காக தந்து இன்னுயிரை துறந்தவர்களுக்காக, ஒரு போர் நினைவிடத்தைக் கூட அமைக்கவில்லை. ஆனால், நாங்கள் அதை கட்டி முடித்து உள்ளோம்.

எதிர்மறை அரசியல் நிகழ்த்தி வரும் எதிர்கட்சிகளுக்கு மத்தியில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகின்றோம். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு இருந்தாலும், வாக்கு வங்கியை பொருட்படுத்தாமல், வளர்ச்சியை முன்னோக்கி பயணித்து வருகின்றோம்.

நாட்டின் கண்ணோட்டம் மாறி உள்ளது, இதன்காரணமாக, அதன் மதிப்பு உயர்ந்து உள்ளது. இன்று சர்வதேச நாடுகள் அனைத்தும் தனது கவனத்தை இந்தியாவின் மீது கவனம் செலுத்துகின்றது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கட்சிக்கு முழுப்பெரும்பான்மை கிடைத்து உள்ளது, இரண்டாவது, முக்கிய விவகாரங்களில், நிரந்தர தீர்வுகளை எடுப்பதற்கு, அரசு முயன்று வருவதாக, பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இதையும் படிங்க: ஐஜி அஸ்ரா கார்க்கின் அடுத்த குறி வடசென்னை - அள்ளுவிடும் ரவுடிகள்.. பாய்ச்சலுக்கு ரெடியான பஞ்சாப் ரியல் சிங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.