ETV Bharat / bharat

புதுச்சேரியில் நாளை முதல் 18 - 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி: 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இணையதள முன்பதிவை, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் நாளை முதல் 18-45 வயத்துக்குள்பட்டோருக்கு தடுப்பூசி!

author img

By

Published : May 19, 2021, 5:07 PM IST

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”புதுச்சேரியில் நாளை (மே.20) முதல் தடுப்பூசி செலுத்தப்படும். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, பல் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட ஆறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பை 18 வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'வீட்டிலிருந்தே விளையாடுங்கள்' - ஆன்லைன் கேம்களுக்கு 'குட் பை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.