நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவிவருகிறது. எனவே இதனால் ஏற்படும் உயிர் பலிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
அதேபோல் மாநிலத்திலுள்ள பிற மாநிலத்தவருக்கும் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும். மக்களின் வாழ்க்கையைவிட பணம் முக்கியமல்ல.
மேலும் தடுப்பூசி திட்டத்தை நடத்துவதற்கு மாவட்டங்களுக்கான கட்டணம் நியமிக்கப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வழங்கல் குறித்து அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
எனவே கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டி நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.