இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. இதில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்துவது கடந்த ஜனவரி 16ஆம் தேதிமுதல் தொடங்கி ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
கடந்த நவம்பர் முதல் இதுவரை நான்கு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது.
மேலும் புதிதாக 39 ஆயிரத்து 726 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊர்ந்து சென்று பதவி பெறவில்லை; நடந்து சென்று பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி