ETV Bharat / bharat

கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை - மருத்துவர் கைது - rap

அவுரங்காபாத் பத்மாபுர அருகே கரோனா சிகிச்சை பெற்றுவந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொரோனா நோயாளிக்கு பாலியல் பலாத்காரம்
கொரோனா நோயாளிக்கு பாலியல் பலாத்காரம்
author img

By

Published : Mar 4, 2021, 11:17 AM IST

Updated : Mar 4, 2021, 2:40 PM IST

அவுரங்காபாத் பத்மாபுர பகுதி அருகே கரோனா சேவை மையம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த கரொனா சேவை மையத்தில் அப்பகுதியில் மக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று கொள்வார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், பெண்ணுக்கு மருத்துவர் அமிஷ் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், நேற்று கரோனா குறித்து ஆலோசனை கூற மருத்துவர் அமிஷ் அழைத்ததை நம்பி பெண்ணும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனை சாதகமாகக் பயன்படுத்திக்கொண்ட மருத்துவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அலறியடித்து வந்த பெண் அருகில் உள்ள நகராட்சி சுகாதார அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், முன்னதாக மருத்துவர் தனக்கு ஆலோசனை கூறுவதாக சொல்லி என்னை தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவர் கைது செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Mar 4, 2021, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.