புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,160 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியான தகவலறிக்கையில், 'புதுச்சேரியைச் சேர்ந்த 974 பேர், காரைக்காலைச் சேர்ந்த 129 பேர், மாஹேவைச் சேர்ந்த 40 பேர்,
ஏனாம் பகுதியைச் சேர்ந்த 17 பேர் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1,887ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாநிலத்தில் தற்போது 7,602 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,28,021 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1,37,710 நபர்கள் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என புதுச்சேரி சுகாதாரத்துறைத் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கு கரோனா - வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்