ETV Bharat / bharat

More Restrictions in Puducherry: புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - புதுச்சேரியில் கரோனா அதிகரிப்பு

More Restrictions in Puducherry: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

author img

By

Published : Jan 6, 2022, 6:56 PM IST

More Restrictions in Puducherry: புதுச்சேரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்துவருகிறது.

இன்றைய தினம் புதுச்சேரியில் புதிதாக 129 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இன்று (ஜனவரி 6) புதுச்சேரி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, "புதுச்சேரியில் உள்ள வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பார்கள், கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் 50 விழுக்காடு பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 விழுக்காடு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். கோயில்களில் பக்தர்கள் இன்றி குடமுழுக்கு நடத்த வேண்டும். பள்ளிகளில் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழக்கம்போல் வகுப்புகளை நடத்தலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Punjab Protest: 'பஞ்சாப் சம்பவம் மூலம் வெளிப்பட்ட காங்கிரசின் எண்ணம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.