சிம்லா: 337 ஆண்டுகள் பழமையான லாவி திருவிழா கரோனாவால் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியா - திபெத் இடையே நடைபெறும் மாபெரும் வணிக விழாவானா இது, சாதாரணமாக நடைபெற்றது.
காபூல், காந்தஹார், திபெத், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளில் நூற்றாண்டுகள் கடந்து கொண்டாடப்படுகிறது லாவி திருவிழா. இந்தியாவில் சிம்லா மாவட்டம் சட்லஜ் நதிக்கரையோரம் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இவ்விழா நடைபெறுவது வழக்கம்.
1985ஆம் ஆண்டு விபத்ரா சிங் (காங்கிரஸ்) தலைமையிலான ஹிமாச்சல அரசு, இவ்விழாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்தது. இங்கு வணிகம் செய்யப்படும் சமுர்த்தி குதிரைகள் மிகவும் பிரபலம். அதேபோல் தேன், உலர்ந்த பழங்கள், ஆப்பிள்கள், விவசாயத்துக்கு பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படும். தற்போது கரோனா காரணமாக இந்த ஆண்டு விழா சாதாரணமாக நடைபெற்றது.
சிம்லா, கின்னனூர், குலு, மண்டி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டும் இதில் பங்கேற்று வணிகம் செய்தனர்.