ETV Bharat / bharat

புதுச்சேரி மத்திய சிறையில் அதிகரிக்கும் கரோனா! - Corona Virus

புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி கைதிகளுக்கு கரோனா
புதுச்சேரி கைதிகளுக்கு கரோனா
author img

By

Published : Apr 29, 2021, 7:22 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப். 27) ஒரே நாளில் 1,021 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 600-க்கும் மேற்பட்ட கைதிகளில் 71 தண்டனை கைதிகள் உள்ளனர்.

65 கைதிகளுக்கு கரோனா

இந்நிலையில் கடந்த வாரம் சிறைச்சாலையில் உள்ள 50 தண்டனை கைதிகள், சிறைவார்டன்கள் மூன்று பேர் என மொத்தம் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலை வளாகம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 65 கைதிகள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த வாரம்முதல் புதுச்சேரி மத்திய சிறையில் கரோனா எதிரொலி காரணமாக பரோல், பார்வையாளர்கள் அனுமதி ரத்துசெய்யபட்டு, சிறையில் கைதிகள், வார்டன்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து இருக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என அனைவரையும் பரிசோதிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.