கர்நாடக மாநிலத்தில் எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின் முடிவில் 60 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக பள்ளி வாளகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் அணைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால் அவர்கள் கரோனா தொற்றிலிருந்து தப்பியதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் 7 பேருக்கு கரோனா: பள்ளி மூடல்