புதுச்சேரியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு, 4 மையங்களில் கரோனா பரிசோதனை நடைபெற்றது.
தற்போது வரை 20 முகவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரிது வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) 6,833 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 1,258 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவத்துள்ளது.
இதனை அடுத்து முகவர்களுக்கான கரோனா பரிசோதனை முகாம்கள் தாவரவியல் பூங்கா, கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையம் உள்ளிட்ட 4 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.