மத்தியப் பிரதேசம் மாநிலம் கண்ட்வாவில் சைகோன்மகான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பஞ்சாரி கிராமத்தில், பெண் உள்பட இருவரை, காவல் துறையினர் பலமாகத் தாக்குகின்றனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் கூறுகையில், "கிராமவாசிகளில் ஒருவருக்கு, கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறிய சுகாதாரத் துறை ஊழியரைத் தாக்கியுள்ளனர்.
இது குறித்து விசாரிக்கச் சென்றபோது, எங்கள் மீதும் கற்களை வீசத் தொடங்கினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவே தடியடி நடத்தினோம்" எனத் தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தில் சைகோன்மகான் காவல் நிலைய பொறுப்பாளர் கணபத் கானெல், காவலர் ஆகாஷ் ஆகியோரைப் பணியிடைநீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை - போக்சோவில் மூவர் கைது