இடுக்கி : 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து துங்கிக்கொண்டிரிந்த 6 வயது சிறுவனைத் தலையில் சுத்தியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, 14 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டும் மல்லாது சிறுமியின் தாயார் மற்றும் பாட்டியையும் கொலை செய்ய முயன்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், குழந்தைகளின் தாய்வழி சகோதரியின் கணவராவர்.
இதையும் படிங்க : இறுதி நிமிடத்தில் ஆட்சியைத் தக்க வைத்த காங்கிரஸ் - சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
இச்சம்பவம் கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டம் ஆனச்சல் அருகே உள்ள அமக்கண்டத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ள தூவல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த 2 ஆண்டுகளாக இவ்வழக்கு இடுக்கி விரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 73 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3, 2021 அன்று நடந்த குற்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது. அதில், சிறுவனைக் கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனையும் சிறுமியைக் கொடூரமாக தாக்கி பாலியல் வன்புணர்வு செய்த மற்றும் அவரது தாயையும் பாட்டியையும் கொலை செய்ய முயன்றததற்காக நான்கு ஆயுள் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்.
மேலும், அபராதத்தைச் செலுத்தாவிட்டால் மேலும் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இடுக்கி விரைவு நீதிமன்ற நீதிபதி டி.ஜி.வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சென்னை ஐஐடி 60வது பட்டமளிப்பு விழா - இந்திய தலைமை நீதிபதி சிறப்புரை!