ETV Bharat / bharat

உடுப்பியில் கிளம்பியது அடுத்த சர்ச்சை: சாலைக்கு 'கோட்சே' பெயர்!

கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உள்ள போலா கிராமத்திற்குட்பட்ட சாலையில் 'நாதுராம் கோட்சே' எனப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'கோட்சே' பெயர்
'கோட்சே' பெயர்
author img

By

Published : Jun 6, 2022, 10:18 PM IST

உடுப்பி (கர்நாடகா): கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், கார்கலா தாலுகாவில் உள்ள போலா கிராமத்தில் உள்ள சாலைக்கு நாதுராம் கோட்சே எனப் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலா கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இந்தப்பலகை வைக்கப்பட்டுள்ளது. 'பதுகிரி நாதுராம் கோட்சே சாலை' என்று கன்னட மொழியில் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில் போலா கிராமப்பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ’இரண்டு நாட்களுக்கு முன்பு பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. சாலைக்கு பெயர் சூட்டுவது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் பலகை வைத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று (ஜூன் 6) போலா கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் கார்கலா காவல் துறையினர் பெயர்ப்பலகை உள்ள சாலைக்கு சென்று விசாரித்து, பெயர்ப்பலகையை அகற்றினர்.

உடுப்பியில் கிளம்பியது அடுத்த சர்ச்சை பஞ்சாயத்து சாலைக்கு 'கோட்சே' பெயர்

முன்னதாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் தான் முதன்முதலாக ஹிஜாப் அணியத்தடை விதிக்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் தொடரும் ஹிஜாப் பிரச்சினை: ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.