லக்னோ: ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
அதன் நீட்சியாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) போராட்டம் நடத்தினார்கள். அப்போது துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்பவர் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.
சீதாப்பூரில் கைது
இதனால், கோபமுற்ற விவசாயிகள் இரண்டு சொகுசு கார்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி, சீதாப்பூரில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டார். வீட்டு சிறையில் இருக்கும் பிரியங்கா காந்தி விவசாயிகள் மீது கார் ஏற்றும் காணொலியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
லக்கிம்பூர் வருவாரா பிரதமர்?
அதில், விவசாயிகளை சந்திக்க சென்ற தன்னை முறையான காரணமின்றி கைது செய்துள்ளீர்கள். ஆனால், விவசாயிகளை கொலை செய்தவர்களை கைது செய்யவில்லை" எனக்குறிப்பிட்டிருந்தார்.
மேலும், லக்னோ வரும் பிரதமர் லக்கிம்பூர் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"நேற்று காலை 4.30 மணியளவில் ஐபிசி 151-கீழ் கைது செய்யப்படுவதாக சீதாப்பூர் டிஎஸ்பி பியூஷ் குமார் சிங் வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தார்.
38 மணிநேரம் ஆகிறது
அப்போது நான் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள லக்கிம்பூர் எல்லையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சீதாப்பூரில் இருந்தேன். எனக்கு தெரிந்தவரை சீதாப்பூரில் 144 தடை உத்தரவு அமலில் இல்லை.
-
Presently I am not going into the details of the completely illegal physical force used on my colleagues & me at the time of my arrest as this statement serves merely to clarify the continuing illegality of my confinement.: Smt. @priyankagandhi pic.twitter.com/Hwyagg7Re7
— Congress (@INCIndia) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Presently I am not going into the details of the completely illegal physical force used on my colleagues & me at the time of my arrest as this statement serves merely to clarify the continuing illegality of my confinement.: Smt. @priyankagandhi pic.twitter.com/Hwyagg7Re7
— Congress (@INCIndia) October 5, 2021Presently I am not going into the details of the completely illegal physical force used on my colleagues & me at the time of my arrest as this statement serves merely to clarify the continuing illegality of my confinement.: Smt. @priyankagandhi pic.twitter.com/Hwyagg7Re7
— Congress (@INCIndia) October 5, 2021
நான், மக்களவை உறுப்பினர்களான தீபேந்தர் ஹூடா, சந்தீப் சிங், இரண்டு கட்சி பணியாளர்களுடன் எந்தவித பாதுகாப்பு வாகனங்களும் இல்லாமல் ஒரே ஒரு வாகனத்தில் தான் பயணித்தேன். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் யாரும் என்னுடன் வரவில்லை.
நேற்று நான் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டது முதல் இன்று (அக். 5) மாலை 6.30 மணிவரை (38 மணிநேரம்) நான் கைது செய்யப்பட்டது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சட்டத்திற்கு புறம்பாக...
காவலர்கள் தரப்பில் இருந்து சட்டரீதியான உத்தரவு அல்லது சம்மன் போன்றவற்றை என்னிடம் காண்பிக்கவில்லை. எஃப்ஐஆர் அறிக்கையயும் தரவில்லை.
என்னை தவிர்த்து 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை சமூக வலைதளங்கள் மூலம் அறிந்துகொண்டேன். அந்த 11 பேரில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே இல்லை. மேலும், கடந்த 4ஆம் தேதி எனக்கு மாற்றுத்துணிகள் கொண்டுவந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், என்னை இதுவரை நீதிமன்றத்திலோ அல்லது நீதிபதியிடமோ ஆஜர்படுத்தவில்லை.
காலையில் இருந்து வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருக்கும் எனது வழக்கறிஞரிடம் கூட என்னை சந்திக்க காவலர்கள் அனுமதிக்கவில்லை.மேலும், சட்டத்திற்கு புறம்பாக என்மீது தொடக்கப்பட்ட உடல் ரீதியாக தொடுக்கப்பட்ட அடக்குமுறை குறித்து பொதுவெளியில் தற்போது விவரிக்க விரும்பவில்லை" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி காட்சி!