ETV Bharat / bharat

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தொடர் வெள்ளப்பெருக்கு - மக்கள் அவதி! - Enam

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 16) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தொடர் வெள்ளப் பெருக்கு- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Jul 16, 2022, 3:22 PM IST

புதுச்சேரி: ஆந்திர மாநிலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ளம் ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து தாழ்வான பகுதிகளுக்கும் செல்கிறது. ஏனாமில் மழை பெய்யாவிட்டாலும் வெள்ளப்பெருக்கு கரையை மீறி ஊருக்குள் நுழைந்துள்ளது.

இதனால் 14 மீனவ கிராங்களைச்சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு 5ஆவது நாளாக இன்றும் குறையவில்லை. கோதாவரி ஆற்றுக் கரையோரம் ஏறிய வெள்ளம் தொடர்ந்து இன்று மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும் நுழைந்தது. இதனால் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

வெள்ள நீரால் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களைச் சுகாதாரத்துறை ஊழியர்கள் படகில் சென்று பார்த்து, மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளைச்செய்து வருகின்றனர். நிவாரண உதவிகளை ஏனாம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திருப்பதி தேவஸ்தான உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணா ராவ் வழங்கினார்.

பொதுப்பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது. பாதுகாப்பிற்காக 24 மணி நேரக்கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட வேண்டி இருப்பதால் அரசு ஊழியர்கள் உள்ளூரிலேயே இருக்க மண்டல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்களின்

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தொடர் வெள்ளப்பெருக்கு - மக்கள் அவதி!
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாய் ஏனாம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.