இந்தியாவில் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை தொடர்ந்து உயர்வதால் சாமானிய மக்கள் கடும் கஷ்டத்தை சந்திக்கின்றனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தினமும் விலை அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 77 டாலர்களுக்கு மேல் விற்கப்படுகிறது. இருப்பினும், உற்பத்தி குறைந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் டீசல் அதிக விலைக்கு விற்பது தொடர்கிறது.
எனவே, உலக அளவில் எண்ணெய் பொருள்கள் எந்த அளவுக்கு உயர்கிறது, எந்த அளவுக்கு குறைகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, தேசியத் தலைநகரில் பெட்ரோல் 100 ரூபாய்க்கும், டீசல் 89 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்று (ஜூலை.09) விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஆனால், கடந்த இரண்டு நாள்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை குறைக்கப்படுவதன் காரணமாக, வரும் நாள்களில் அதன் விற்பனை விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.