ETV Bharat / bharat

முதல் மனைவியை கொலை செய்த சில நிமிடங்களில் 2ஆவது திருமணம்: இளம்பெண் கொலையில் பகீர் உண்மைகள் - பெண் கொலையில் பகீர் தகவல்கள்

டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக, முதல் மனைவியை இளைஞர் கொலை செய்த வழக்கில், அவரது தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையான பெண் இளைஞரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

டெல்லி கொலை வழக்கு
டெல்லி கொலை வழக்கு
author img

By

Published : Feb 18, 2023, 5:25 PM IST

டெல்லியை சேர்ந்த சாஹில் மற்றும் நிக்கி ஆகியோர், திருமணம் செய்து கொள்ளாமலேயே (live in relationship) ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது சாஹிலின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் தான் இளம்பெண் நிக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரவு முழுக்க காரில் பயணம்: இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 9ஆம் தேதி சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதையறிந்த நிக்கி, சாஹிலுடன் தகராறு செய்துள்ளார். நள்ளிரவு நிக்கி வசிக்கும் வீட்டுக்கு வந்த சாஹில், உறவினரின் காரில் அவரை வெளியே அழைத்து சென்றுள்ளார். நிஜாமுதீன், ஆனந்த் விஹார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இருவரும் டெல்லியை விட்டு வேறிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கழுத்து நெரித்து கொலை: ஆனால் மறுநாள் (பிப்.10) காலையில் சாஹிலுக்கு அவரது பெற்றோரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. திருமணத்துக்கு சிறிது நேரமே உள்ளது என்றும், உடனடியாக வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் சாஹில் மற்றும் நிக்கி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சாஹில், காரில் இருந்த டேட்டா கேபிளால் நிக்கியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கொலைக்கு பின் 2ஆவது திருமணம்: பின்னர் நிக்கியின் உடலுடன் காஷ்மீரி கேட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஜாப்கருக்கு காரை ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு சொந்தமான ஹோட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் சடலத்தை வைத்துள்ளார். இதையடுத்து மடோத்தி கிராமத்துக்கு சென்ற சாஹில், இரண்டாவது திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமண சான்று பறிமுதல்: இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாஹிலை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நொய்டாவில் சாஹிலுக்கும், நிக்கிக்கும் திருமணம் நடந்தது அம்பலமாகியுள்ளது. கோயிலில் நடந்த திருமணத்துக்கான சான்றிதழை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

5 பேர் கைது: இந்நிலையில் இக்கொலை வழக்கில் சாஹிலின் தந்தை வீரேந்திர சிங், அவரது உறவினர்கள் இருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மருமகளை மகன் கொலை செய்தது தமக்கு தெரியும் என சிங் ஒப்புக் கொண்டுள்ளார். எஞ்சிய 4 பேரும், நிக்கியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க சாஹிலுக்கு உதவியதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பிளம்பர் போல நடித்து மூதாட்டி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.