இது குறித்து நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில், 19 நீட் தேர்வாளர்கள் தாக்கல்செய்த மனுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்த உத்தரவை வழங்கி உள்ளனர்.
குறிப்பாக தேர்வர்களின் மனுவில், "எங்களுக்கு வழங்கப்பட்ட நீட் தேர்வு முடிவு ஓஎம்ஆர் தாள்களில், வெவ்வேறு பதிவெண்கள், கையொப்பங்கள், பதிலளித்த கேள்விகளில் உள்ள வேறுபாடு, மதிப்பெண்களில் உள்ள வேறுபாடு குறித்து தேசிய தேர்வு முகமையில் கேள்வி எழுப்பினோம்.
ஆனால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே எங்களின் அசல் ஓஎம்ஆர் மதிப்பெண் தாள்கள் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் விசாரணையில் நீதிபதிகள், "நீட் தேர்வாளர்களுக்கு அசல் ஓஎம்ஆர் தாள்களை வழங்குவது குறித்து, தேசிய தேர்வு முகமை பரிசீலிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் இது இல்லை - கண்ணீர் வடிக்கும் கோவை மாணவர்