ETV Bharat / bharat

கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு! மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் தலைவர்கள் மாற்றமா? 2024 தேர்தல் ஆலோசனையா?

வரும் டிசம்பர் 21ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Congress Working Committee meeting
Congress Working Committee meeting
author img

By PTI

Published : Dec 17, 2023, 3:36 PM IST

டெல்லி : அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் மும்முரமாக களப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய கூட்டணிக்கு அமையவில்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான திசையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தென் மாநிலங்களில் காங்கிரஸ் சற்று பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆனால் தென் மாநிலங்களின் இடங்களை வைத்து மட்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு துளி கூட வாய்ப்பில்லை. இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றியை கிட்ட வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் கட்சி சிக்கி உள்ளது.

வரும் டிசம்பர் 19ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிடோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் நடந்த பீகார் பாட்னா ஆலோசனைக் கூட்டம், பெங்களூரு மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாய் அளவில் இருந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சு 19ஆம் தேதி நடைபெறும் 4வது கட்ட கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தோல்வியை அடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜித்து பட்வாரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல், மற்ற இரு மாநிலங்களிலும் சீரமைப்புகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.