டெல்லி: சமீபத்தில் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் தெலங்கானா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (அக்.15) வெளியிட்டு உள்ளது.
-
Congress releases a list of 144 candidates for the upcoming Madhya Pradesh Assembly polls
— ANI (@ANI) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
State Congress President and former cm Kamal Nath to contest from Chhindwara pic.twitter.com/4e6Gx4d37D
">Congress releases a list of 144 candidates for the upcoming Madhya Pradesh Assembly polls
— ANI (@ANI) October 15, 2023
State Congress President and former cm Kamal Nath to contest from Chhindwara pic.twitter.com/4e6Gx4d37DCongress releases a list of 144 candidates for the upcoming Madhya Pradesh Assembly polls
— ANI (@ANI) October 15, 2023
State Congress President and former cm Kamal Nath to contest from Chhindwara pic.twitter.com/4e6Gx4d37D
அதன்படி, நவம்பர் 30 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானாவுக்கு 51 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதில், தெலங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனுமலா ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் இருந்தும், தெலங்கானா சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவர் மல்லு பட்டி விக்ரமார்கா மதிரா தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், டாக்டர் கோடா நீலிமா சனத் நகரில் இருந்தும், ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கொல்லபூரில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
அதேநேரம், நவம்பர் 17 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான கமல் நாத் சிந்த்வாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், டாக்டர் கோவிந்த் சிங் லாஹர் தொகுதியிலும், திக்விஜயா சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் ரகோகார்ஹ் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர். இதில், ஜெய்வர்தன் சிங், கமல் நாத் தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நவம்பர் 7 மற்றும் 17 அன்று இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பதான் தொகுதியில் இருந்து, அம்மாநில துணை முதலமைச்சர் டி எஸ் சிங் டியோ அம்பிகாபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!