ETV Bharat / bharat

மோடி, பினராயி, அதானி இடையே ரகசிய உடன்படிக்கை - காங். குற்றச்சாட்டு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொழிலதிபர் அதானி ஆகியோர் இடையே ரகசிய உடன்படிக்கை உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Congress
Congress
author img

By

Published : Mar 30, 2021, 3:27 PM IST

கேரளாவில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவர அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப். கூட்டணிக்கும் நேரடி மோதல் நிலவிவரும் நிலையில், பாஜகவும் தீவிரமாகக் களத்தில் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா இடதுசாரி அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர், "ஆளும் பினராயி விஜயனுக்கும், மத்தியில் ஆளும் மோடிக்கும், தொழிலதிபர் அதானிக்கும் இடையே ரகசிய உடன்படிக்கை உள்ளது. அதானி குழுமத்திற்கு ரூ.8,785 கோடிக்கு காற்றாலை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அதேப்போல் அதானி குழுமத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை முதலமைச்சர் விஜயன் தாரைவார்த்துள்ளார். தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் மத்திய அரசு அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால் பினராயி விஜயன், நரேந்திர மோடி, அதானி ஆகியோர் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது எனப் புலப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ராகுலுக்கு ஸ்டாலினின் அன்புக்கட்டளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.