ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா யாத்ரா’ ஓராண்டு நிறைவு - காங்கிரஸின் முக்கிய திட்டம் என்ன? - பாரத் ஜோடா யாத்ரா ஓராண்டு நிறைவு

Bharat Jodo Yatra in all the districts across the country: ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாரத் ஜோடா யாத்ரா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 5:08 PM IST

ஹைதராபாத்: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடா யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று தொடங்கிய இந்த ஒற்றுமைப் பயணம், நடப்பு ஆண்டின் ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் முடிவடைந்தது.

இந்த பயணத்தில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டரில் 130 நாட்களில் கடந்து உள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த இந்திய ஒற்றுமைப் பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாரத் ஜோடா யாத்ராவை நடத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Congress party to organise 'Bharat Jodo Yatra' in all the districts across the country to Commemorate the first anniversary of 'Bharat Jodo Yatra' on September 7. pic.twitter.com/PFxyUtwwKM

    — ANI (@ANI) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, காங்கிரஸ் தொடங்கிய இந்த யாத்திரையின் முதல் பகுதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், தனது புதிய நடைபயணத்தை குஜராத் முதல் மேகாலயா வரை தொடங்க உள்ளதாக மகராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: ‘இந்திய மாநிலங்களின் மீதான தாக்குதல்’ - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

மேலும், ராகுல் காந்தி மேற்கொண்ட் நடைபயணத்தின் பலன் கர்நாடகா மற்றும் இமாச்சலப்பிரதேச தேர்தல் வெற்றிகளில் பிரதிபலித்ததாக கருதப்படுகிறது. அதிலும், கர்நாடகாவில் மட்டும் அம்மாநிலத்தின் குண்டுலுபேட் முதல் ராய்ச்சூர் தொகுதி வரையிலான 511 கிலோ மீட்டரை 22 நாட்களில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த யாத்திரையின்போது 100 கூட்டங்கள், 12 பொதுக்கூட்டங்கள் மற்றும் 13 செய்தியாளர் சந்திப்புகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அது மட்டுமல்லாமல், 275 திட்டமிட்ட நடைபயண உரையாடல்களையும், 100 திட்டமிடப்படாத உரையாடல்களையும் ராகுல் காந்தி மேற்கொண்டார். இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உடன் ராகுல் காந்தி உரையாடல் நிகழ்த்தியது பேசுபொருளாக மாறி இருந்தது.

இதையும் படிங்க: வாக்கு வங்கிக்காக மட்டுமே ‘சனாதான தர்மம்’.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமித்ஷா எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.