ETV Bharat / bharat

ஏனாம் தொகுதியில் போட்டியிடும் ரங்கசாமியை எதிர்த்து வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! - ஏனாம் தொகுதி

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் நாளை (மார்ச் 19) நிறைவு பெறவுள்ள நிலையில், ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

NR congress contestant rangasamy
என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ரங்கசாமி
author img

By

Published : Mar 18, 2021, 2:30 PM IST

தேசிய ஜனநாயகக் கூட்டணி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்படித்திருந்தன. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சி 16, பாஜக 9, அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் எனத் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

இதையடுத்து கூட்டணிக் கட்சியாக இருந்த பாமக, தங்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முறைப்படி தொகுதிப் பட்டியல் வேட்பாளர்களுக்கு அறிவிக்க முடியாமல் அனைத்து கட்சிகளும் திணறி வந்தன. வேட்புமனுத்தாக்கல் நாளை முடியவுள்ள நிலையில், பாஜகவினர் தாங்கள் விரும்பிய மண்ணாடிப்பட்டு தொகுதியை கேட்டு பெற்றனர். அதேபோல் அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நெல்லித்தோப்பு தொகுதியையும், பாஜக கேட்டு தன் வசமாக்கியது.

இதனால் அவருக்கு மாற்று தொகுதியாக உருளையன்பேட்டை தொகுதியை ஒதுக்கப்பட்டது.

பாமக தனித்து போட்டி

பாமகவுக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்காமல் கழற்றி விடப்பட்டது. இதையடுத்து பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்து, 9 தொகுதிகளில் தங்களது வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மதசார்பற்ற கூட்டணி

அதேபோல் மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (மார்ச் 17) அதிகாரபூர்வமாக அறிவித்தது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியிருந்து விலகி, காங்கிரஸ் கட்சிக்கு வந்த வைத்தியநாதனுக்கு லாஸ்பேட்டை தொகுதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஷாஜகான் கடந்த முறை வெற்றி பெற்ற காலப்பேட்டை தொகுதியிலிருந்து மாறி, காமராஜர் நகரில் தற்போது போட்டியிடவுள்ளார்.

முதலமைச்சராக பதவி வகித்த நாராயணசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைபோல் இந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

இரண்டு தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி

காங்கிரஸில் அமைச்சராக இருந்து பதவி விலகிய மல்லாடி கிருஷ்ணாராவ், தான் போட்டியிட்ட தொகுதியான கட்டாஞ்சாவடி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விட்டுக்கொடுத்தார். இதையடுத்து தற்போது அவரை ஆதரித்து அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடாமல் காங்கிரஸ் நழுவ காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிட முன்வராததால் காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுவதை தவிர்கும் எனத் தெரிகிறது. அதே போல் ரங்கசாமி ஏனாம் தொகுதியிலும் போட்டியிடவுள்ளார். அங்கு ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.