ETV Bharat / bharat

தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சௌத்ரி உயிரிழந்தார்.

காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங்
காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங்
author img

By

Published : Jan 14, 2023, 11:06 AM IST

பஞ்சாப்: காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சௌத்ரி இன்று (ஜன 14) ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றார். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட காங்கிரஸ் கட்சியினர் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு காங்கிரஸ் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.பி. சந்தோக் சிங் சௌத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரது இழப்பு கட்சிக்கும், அமைப்புக்கும் பெரும் அடியாகும். இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களிடையே எனது எண்ணம் செல்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

சந்தோக் சிங் மறைவுக்கு, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜலந்தரின் காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சௌத்ரியின் மறைவுக்கு நான் வருந்துகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

  • ਕਾਂਗਰਸ ਦੇ ਜਲੰਧਰ ਤੋਂ ਮੈਂਬਰ ਪਾਰਲੀਮੈਂਟ ਸੰਤੋਖ ਸਿੰਘ ਚੌਧਰੀ ਜੀ ਦੀ ਬੇਵਕਤੀ ਮੌਤ ਦਾ ਬੇਹੱਦ ਦੁੱਖ ਹੋਇਆ..ਪ੍ਵਮਾਤਮਾ ਵਿੱਛੜੀ ਰੂਹ ਨੂੰ ਸਕੂਨ ਬਖ਼ਸ਼ੇ ..ਵਾਹਿਗੁਰੂ

    — Bhagwant Mann (@BhagwantMann) January 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், “சந்தோக் சிங் இறப்பை அறந்து வருந்துகிறேன். இவரது இறப்பால், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல். இவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

  • Extremely saddened to hear about the sudden demise of MP Santokh Singh Chaudhary ji due to a heart attack today.

    My heartfelt condolences are with his entire family in their time of grief. May Waheguru Ji grant eternal peace to the departed soul. pic.twitter.com/LJqQA8avAo

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) January 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சௌத்ரிக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த ஸ்பானிஷ் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்; 5 பேருக்கு மறுவாழ்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.