டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நேற்று (செப்.5) ஐரோப்பியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஒரு வார கால சுற்றுப்பயணத்தை முடித்து செப்டம்பர் 11ஆம் தேதி இந்தியா திரும்புகிறார். இந்த நிலையில் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் G20 மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் G20 மாநாடு முடிந்த ஒரு நாளுக்கு பிறகே ராகுல் இந்தியா திரும்புகிறார். மேலும் ஐரோப்பியா நாடுகளில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்க உள்ளார். நாளை (செப்.7) ஐரோப்பிய ஒன்றிய வழக்கறிஞர்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள மாணவர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.
அதன் பின்பு ஹேக்கில் மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின் செப்டம்பர் 8ஆம் தேதி INDIA கூட்டணி தலைவராக பாரிஸில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 9ஆம் தேதி பிரெஞ்சு தலைநகர் பிரான்சில் தொழிலாளர் சங்கங்களுடனான கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: இந்தியா பெயர் மாற்றம் விவகாரம்; கருணாநிதி பாணியில் விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
செப்டம்பர் 10-ஆம் தேதி நார்வே ஓஸ்லோ நகரில் இந்தியாவின் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கும் ராகுல் காந்தி, பின்னர் செப்டம்பர் 11-ஆம் தேதி மீண்டும் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் அதிகாரபூர்வ பரிமாற்றங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் செய்த மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆளும் தேிசய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்திய தேசிய வளர்ச்சிக்கான கூட்டணி (I.N.D.I.A) தலைவர்களுக்கு இடையே கடுமையான விவாதங்கள் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் G20 மாநாடு நடைபெறுகிறது. இதற்காக டெல்லி மாநகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் உலக அளவில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பா யூனியனின் உயர் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி ஜி20 மாநாடு: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சாவூர் நடராஜர் சிலை!