புதுச்சேரி ஏனாம் பகுதியை சேர்ந்தவர் மல்லாடி கிருஷ்ணராவ். 1996ஆம் ஆண்டில் இருந்து ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதுவரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும் 3 முறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2016ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றார். கடந்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து அலுவலகத்திற்கு மல்லாடி கிருஷ்ணாராவ் கடிதம் அனுப்பியுள்ளார். 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தற்போது 11 காங்கிரஸ் உறுப்பினர்கள், கூட்டணி திமுக 3 மற்றும் சுயேச்சை முறையே 15 பேர் உள்ளனர்.
எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸில் 7 உறுப்பினர்களும், அதிமுக 4 உறுப்பினர்களும் உள்ளனர். நியமன சட்டப்பேரவை உறுப்பினர் 3 பேர் எதிர்க்கட்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:திமுகவிற்கு ஆதரவளித்த தேமுதிக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - விஜயகாந்த் அறிக்கை!