ETV Bharat / bharat

கர்நாடக சபாநாயகராக யு.டி. காதர் தேர்வு... இவர் தான் முதல் சபாநாயகர்!

கர்நாடக சட்டப் பேரவையில் சபாநாயகர் பதவி வகிக்கும் முதல் இஸ்லாமியர் என்ற சிறப்பை யு.டி. காதர் பெற்றார்.

Karnataka
Karnataka
author img

By

Published : May 24, 2023, 5:21 PM IST

பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் யு.டி. காதர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டப் பேரவை சபாநாயகராக பதிவியேற்ற முதல் இஸ்லாமியர் என்ற சிறப்பை யு.டி. காதர் பெற்றார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த மே. 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெறும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் ரேசில் இருவருக்கும் இடையே கடும் போராட்டம் நீடித்த நிலையில், டி.கே. சிவகுமாரை சரிகட்டிய காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்தது.

கடந்த 20ஆம் தேதி பெங்களூரு கண்டீவரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க 3 நாட்கள் சட்டசபை கூட்டப்பட்டது. அவசர சட்டசபை கூட்டத்திற்கு ஆர்.வி. தேஷ் பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்பட்டார்.

இந்நிலையில், சட்டப் பேரவை கூட்டத்தின் இறுதி நாளில் சபாநாயகர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் 5 முறை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான யு.டி காதர் சபாநாயகராக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் முன்மொழிந்தனர்.

இதையடுத்து சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் தரப்பில் யு.டி. காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சபாநாயகர் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படாத நிலையில், யு.டி காதர் சபாநாயகராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, முதலமைச்சர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் பசவராஜ் பொம்மை, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் யு.டி. காதரை அமரவைத்தனர். தற்காலிக சபாநாயகர் ஆர்.வி தேஷ்பாண்டேவிடம் இருந்து சபாநாயகர் பொறுப்புகளை யு.டி. காதர் பெற்றுக் கொண்டார்.

தக்சின கன்னடா மாவட்டத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான யு.டி. காதர் கர்நாடக சட்டப் பேரவையில் முதல் இஸ்லாமிய சபாநாயாகர் என்ற சிறப்பையும் பெற்றார். அடிப்படையில் வழக்கறிஞரான யு.டி. காதர் மங்களூரு தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் சித்தராமையாவின் அமைச்சரவையில் சுகாதாரம், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும் அங்கம் வகித்து உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.

இதையும் படிங்க : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி! ஆஸ்திரேலியா திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.