டெல்லி: இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் (ஏப்.19) மட்டும் இந்தியா முழுவதும் 2.59 லட்சம் பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. முதலைமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது.
சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் திக் விஜய் சிங், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தெலங்கான மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "லேசான அறிகுறிகளுடன் எனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அண்மையில், என்னுடன் நெருங்கி இருந்த அனைவருமே, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள்" என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி கரோனா பரவலின் காரணமாக, மேற்கு வங்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரப்புரை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக இரண்டு நாட்களுக்கு முன் (ஏப்.18) அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது' - கமல்