ETV Bharat / bharat

Karnataka Elections 2023 : தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி - வீடியோ வைரல்! - பிரியங்கா காந்தி வைரல் வீடியோ

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உணவகம் ஒன்றில் தோசை சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Priyanka Gandhi
Priyanka Gandhi
author img

By

Published : Apr 27, 2023, 10:11 AM IST

பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது உணவகத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தோசை சுட்டும், குழந்தைகள் உள்ளிட்டோரிடம் பேசி மகிழ்ந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் களத்தில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஒருபுறம் வேட்பாளர் தங்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கி உள்ளனர். இதனிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.

மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, அங்குள்ள உணவகத்திற்கு சென்றார். உணவகத்தின் சமையல் அறைக்கு சென்ற பிரியங்கா காந்தி, தோசை ஊற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து உணவகத்திற்கு வந்த குழந்தைகள் உள்ளிட்டோரிடம் பேசி மகிழ்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனிடையே உணவக சமையல் அறையில் தோசை சுடும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பிரியங்கா காந்தி, "புகழ்பெற்ற Myalri உணவக நிறுவனர்களுடன் தோசை சுட்டு மகிழ்ந்தேன். நேர்மையும், கடின உழைப்பும் கொண்டு இயங்கும் நிறுவனத்துக்கான மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. உங்களின் அன்பான விருந்தோம்பலுக்கு எனது நன்றி. தோசையும் சுவையாக இருந்தது. எனது மகளை மைசூருக்கு அழைத்து வந்து சாப்பிட வைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

  • Enjoyed making dosas with the legendary Myalri Hotel owners this morning….what a shining example of honest, hard work and enterprise.

    Thank you for your gracious hospitality.
    The dosas were delicious too…can’t wait to bring my daughter to Mysuru to try them. pic.twitter.com/S260BMEHY7

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரியங்கா காந்தி தோசை சுடும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள காங்கிரஸ் அலுவலகம், "சரியான வடிவில் இருக்கும் இந்த தோசைகள் ஒரு தொடக்கம் தான். திறன் படைத்த இந்த கைகள் இந்த உலகிற்கு எல்லையற்ற ஆக்கங்களை கொண்டு வரும்" என்று பதிவிட்டு உள்ளது.

பிரியங்கா காந்தியின் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் டி.கே சிவகுமார், ரன்தீப் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

  • Perfect dosas are just the beginning; with such skillful hands, there's no limit to the power they can bring to the world. pic.twitter.com/qsgUw6IBeJ

    — Congress (@INCIndia) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : Karnataka Election 2023 : நட்சத்திர வேட்பாளர்கள் மீதான வழக்கு பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.