டெல்லி: உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில், மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இது திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது. இந்த அரசின் மீதான ஊழல் புகார் மீது சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணை நடத்த நைனிடால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதிய உணவு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது தற்போதைய காட்சிகள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு உத்தரகண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் இயற்கை பேரழிவில் சிக்கி உயிரிழந்தனர். இதெல்லாம் மாநில அரசின் நிர்வாக தவறினால் நடந்துள்ளது. மக்களுக்கு பாஜக அரசாங்கம் எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை.
ஆகவே மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் அரசியல் திருப்பம்: முதலமைச்சர் திடீர் ராஜினாமா