ETV Bharat / bharat

விவசாயிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்த அழைப்புக்கு குவியும் ஆதரவு! - நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில், காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடு தழுவிய வேலைநிறுத்தம்
நாடு தழுவிய வேலைநிறுத்தம்
author img

By

Published : Dec 6, 2020, 3:52 PM IST

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக விவசாயக் குழுக்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டிசம்பர் 8ஆம் தேதி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள்ஆதரவு அளித்துள்ளன.

பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், டிராக்டர்கள் மூலம் ராகுல் காந்தி பரப்புரை செய்து வேளாண் சட்டத்திற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், "வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், மக்களை பாஜக ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது. நல்ல நாள்கள் வருகிறது என பாஜக பேசிவரும் நிலையில், அவர்கள் சொல்லும் நல்ல காலம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் என்பது தெளிவாகிறது" என்றார். விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசு ஆகியோருக்கிடையேயான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.