ETV Bharat / bharat

மும்பையில் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - விரைவில் தேதி அறிவிப்பு! - Bengaluru Opposition parties meet

எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என்றும்; 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி ஒற்றுமையாக போராடி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.

India
India
author img

By

Published : Jul 18, 2023, 5:24 PM IST

Updated : Jul 18, 2023, 5:33 PM IST

டெல்லி : 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ''இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி'' என்று அழைக்கப்படும், மேலும் கூட்டணி ஒருங்கிணைப்புக்கு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிர்கார்ஜூன கார்கே, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும், அரசியலமைப்பை காக்க மிக முக்கியமான கூட்டம் இது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் இன்று (ஜூலை. 18) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் ஆதரித்ததாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் கூட்டணி இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (இந்தியா) என்று அழைக்கப்படும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

மும்பையில் நடைபெறும் அடுத்த கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என்றும்; அதன் அமைப்புப் பணிகள் குறித்து இறுதி செய்யப்படும் என்றார். மேலும் மும்பையில் நடைபெற உள்ள மூன்றாவது கட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரசார நிர்வாகத்திற்காக டெல்லியில் ஒரு பொதுசெயலகம் அமைக்கப்படும் என்றும், தனிப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகாண குறிப்பிட்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிளவுபட்ட கட்சிகளை ஒன்றிணைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக கூறிய மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகளை கண்டு அவர் பயப்படுவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருந்தாலும் அவை கருத்தியல் சார்ந்தது இல்லை என்று கார்கே தெரிவித்தார்.

வேறுபாடுகளை பின்தள்ளி நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருப்பதாகவும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெறுவோம் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

இதையும் படிங்க : "அதிகாரத்திலோ.. பிரதமர் பதவியிலோ காங்கிரசுக்கு ஆசையில்லை" - மல்லிகார்ஜூன கார்கே!

Last Updated : Jul 18, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.