அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி அசாமில் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்த போதிலும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் எந்த தூரத்திற்கும் செல்ல தயாராகிவிட்டது.
தேர்தல் வெற்றிக்காக நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுடன் காங்கிரஸும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அசாம் மக்கள் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை சிந்தித்து தங்கள் வாக்குகளை செலுத்தவேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகால பாஜக ஆட்சியில் அமைதியையும் வளர்ச்சியையும் அசாம் கண்டுள்ளது. அது தொடர அசாம் மக்கள் பாஜகவுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மாற்றி மாற்றி செருப்பால் அடித்துக் கொண்ட காதல் ஜோடி' - பாடாய் படுத்திய பஞ்சாயத்து