துர்காபூர்(மேற்கு வங்காளம்): மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் வசிக்கும் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் வினோதமான பானத்திற்கு அடிமையாகியுள்ளனர். இது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளான சிட்டி சென்டர், பிதான்நகர் மற்றும் முச்சிப்பரா பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆணுறை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனைவருக்கும் குழப்பமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து ஒரு இளைஞரிடம் கேட்டதற்கு, ‘தொடர்ந்து ஆணுறையில் ஊறவைத்த பானத்தை அருந்துவதாக தெரிவித்தார். மேலும் “தினமும் இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஆணுறையை போட்டு, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்தோம். அதன் சுவை நன்றாக இருந்தது” எனவும் கூறினார்.
இளைஞர்களிடையே ஏற்பட்ட இந்த புதிய மோகத்தால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். துர்காபூரில் பல தனியார் பொறியியல், மேலாண்மை மற்றும் பிற கல்லூரிகள் உள்ளன. பல உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக, அப்பகுதியில் உள்ள மருந்துக் கடைகளில் ஆணுறை பாக்கெட்டுகள் அதிகமாக விற்பனையாவது குறித்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பல பிளேவர் ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு திடீரென அதிகரித்தது. இந்த ஆனுறைகளை வாங்குபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் சிலர் வேலை தேடும் புதிய பட்டதாரிகளாக இருந்தனர். இவர்களின் தனிமையை போக்கி கொள்ள இந்த வினோதமான பானத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த புதிய போதை பழக்கத்தை அறிந்த துர்காபூர் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இயல்பாகவே இது போன்ற ப்ளேவர் ஆணுறைகளில் நறுமண கலவைகள் உள்ளன. அவை வெப்பப்படுத்தப்படும் போது அதன் துகள்கள் உடைந்து அதிலிருந்து ஆல்கஹால் வெளி வருகிறது. இது நறுமண கலவையான டென்ட்ரைட்ஸ் பசையிலும் காணப்படுகிறது. எனவே பலர் போதைக்கு இந்த புதிய டென்ட்ரைட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க:வேற்று மதத்தவரை திருமணம் செய்துகொண்ட தன் மகளை ஆட்டோ ஏற்றிக்கொல்ல முயன்ற தந்தை