ETV Bharat / bharat

ட்விட்டர் தளம் மத வெறுப்பை பரப்புவதாக மேலும் ஒரு புகார்!

மத வெறுப்பை பரப்புவதாகக் கூறி ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரியின் மீதும், என் ஜி ஓ நிறுவனம் ஒன்றின் மீதும் டெல்லி சைபர் பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 4, 2021, 8:47 AM IST

Updated : Jul 4, 2021, 9:10 AM IST

Twitter
Twitter

புது டெல்லி: ட்விட்டர் இந்தியா தளத்தின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி, ட்விட்டர் தளத்தின் கொள்கை இயக்குநர் ஷகுனா கம்ரான், ’ரிபப்ளிக் ஏதிஸ்ட்’ எனும் பக்கத்தைத் தொடங்கியவரும், முதன்மை செயல் அலுவலருமான சுசானா மசிண்டயர் ஆகியோர் மீது மத வெறுப்பை பரப்புவதாகக் கூறி டெல்லி சைபர் பிரிவு காவல் துறையில் வழக்குரைஞர் ஆதித்யா சிங் தேஷ்பால் என்பவர் புகார் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ’காளி’ படம்

‘ரிபப்ளிக் ஏதிஸ்ட்’ பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பகிரப்பட்டுள்ள காளி கடவுளின் படம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள வழக்குரைஞர், தங்கள் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் மட்டும் அப்படம் இல்லாமல், சமூகத்தில் பகை, வெறுப்பை பரப்பி, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

’ஏதிஸ்ட் ரிபப்ளிக்’ எனும் மைக்ரோ பிளாகிங் தளத்தின் இந்தப் புகைப்படம், 2011ஆம் ஆண்டு முதலே ட்விட்டரில் இருந்து வருவதாகவும், இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களின் மீதும் அவதூறு பரப்பும் இது போன்ற அத்தளத்தில் உள்ள படங்களை அகற்றாமல், இந்திய சட்ட விதிமுறைகளை ட்விட்டர் தளம் மீறி வருகிறது எனவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து புகார்கள்

முன்னதாக, இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்டதாக பகிரப்பட்ட போலி காணொலி, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறியும், காணொலி குறித்து விளக்கம் கோரியும் உத்தரப் பிரதேசம், லோனி காவல் துறையினர் ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்,

அதேபோல், ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஆபாசப் பதிவுகள், வீடியோக்களை ஒரு வார காலத்தில் நீக்குமாறு தேசிய மகளிர் ஆணையம், மனீஷ் மகேஸ்வரிக்கு ஆணையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’ஒரு வாரத்தில் ஆபாசப் பதிவுகளை நீக்குக’ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு!

Last Updated : Jul 4, 2021, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.