குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.
அதில் ”திரெளபதி குடியரசுத்தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? முக்கியமாக கவுரவர்கள் யார்?” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த ட்வீட் தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து ராம் கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவரான கூடூர் நாராயண ரெட்டி,வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சர்சை ட்வீட்டுக்கு விளக்கம் அளித்து மற்றொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் “ தான் அந்தப் பதிவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மகாபாரதத்தில் வரும் திரெளபதி கதாப்பாத்திரம் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றும் திரெளபதி என்று பெயர் சிலருக்கே இருப்பதாகவும் அதனாலேயே அந்த பெயருடன் தொடர்புடைய கேரக்டர்ஸ் ஐ இணைத்து பதிவிட்டதாகவும் யார் மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் பதிவிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியைச் சந்தித்தார் திரௌபதி முர்மு!