ETV Bharat / bharat

அமெரிக்க போராட்டத்தில் இந்தியக்கொடி - டெல்லி காவல் நிலையத்தில் புகார் - Complaint filed against Indian national in US capitol protest

ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, இந்தியக்கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க போராட்டத்தில் இந்தியக்கொடி
அமெரிக்க போராட்டத்தில் இந்தியக்கொடி
author img

By

Published : Jan 9, 2021, 3:04 PM IST

டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட வின்சென்ட் சேவியர் என்பவர், இந்தியக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த தீபக் கே சிங் என்பவர் அம்மாநிலம் கல்கஜி காவல் நிலையத்தில் வின்சென்ட் மீது நடவடிக்கைக்கோரி புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்நபரின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முன்னதாக, ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்குவதற்காக, நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: கோவிட் 19: இந்தியாவுக்கு ரூ.2000 கோடி கடன் வழங்கும் ஜப்பான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.