டெல்லி: இந்திய வர்த்தக நிறுவனம் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான விலையை TRQ(tariff-rate quota) நிர்ணயம் செய்துள்ளது. இதனடிப்படையில் நேற்று(மே 24) மத்திய வணிகத்துறை சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெய் வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு செய்துள்ளது. TRQ என்பது குறிப்பிட்ட வரி நியமனத்துடன் இந்தியாவிற்குள் நுழையும் இறக்குமதி வரிகளின் அளவுக்கான ஒதுக்கீடாகும், ஆனால் இந்த விலை நிர்ணயத்திற்கு மின் கூடுதல் இறக்குமதிகளுக்கு சாதாரண கட்டணமே பொருந்தும்.
உள்நாட்டில் விற்கப்படும் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு கச்சா, சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியில் இருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகிய இரண்டும் அடுத்த நிதியாண்டுகளுக்கு - 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரியில்லா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பொருந்தும்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் மீதான் வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் சமையல் எண்ணெய் விலை சற்று குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!