ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் டிரக் லாரி, வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஜஹாஸ்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் இந்த விபத்து பனாஸ் ஆற்றின் அருகே ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சுமார் 15 பேர் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு வேன் மூலம் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இந்த வேன் டிரக் லாரி ஒன்றின் முன்பகுதியில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மீதமுள்ளவர்களை மீட்டு காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து!