இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் கோவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தடுப்பூசிக்கான ஒப்புதல் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசிக்கான ஒப்புதல் கிடைத்த பின்னர், அதை பொதுமக்களுக்கு செலுத்தவதற்கான முன்னெடுப்புகளை அரசு தற்போதே மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. வட இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பூசி கிடங்கு டெல்லி ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அமையவுள்ளது.
மருத்துவமனையில் குளிர்சாதன உபகரணங்கள் தற்போது பொருத்தப்படும் நிலையில், ஒரு கோடி டோசெஜ் தடுப்பூசி மருந்துகளை இங்கு சேமித்துவைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஏழு பிரத்தியேக அறைகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகுபாடற்ற வளர்ச்சியில் அரசு உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி