மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 28ஆம் தேதி, சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டுப்பயணி ஒருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரைப் பரிசோதித்தனர்.
அதில், அவர் வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அலுவலர்கள், அவரது வயிற்றில் இருந்த போதைப்பொருள் கேப்சூல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்தனர்.
வயிற்றிலிருந்த 87 கேப்சூல்களை வெளியே எடுக்க மூன்று நாட்கள் ஆனதாகத் தெரிகிறது. அவரது வயிற்றில் மொத்தம் ஆயிரத்து 300 கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு 13 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
கானா நாட்டிலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்த அந்த நபரை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர் கைது - 7 கிலோ பறிமுதல்