கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப் கூட்டணி 99 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று (மே.20) பதவியேற்றுக் கொண்டார்.
கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்கிறார். அவருக்கும், அவரது அமைச்சவரையில் இடம்பெற்றுள்ள 21 பேருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், ”கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள். அவரது உறுதிப்பாடும் விடாமுயற்சியும் மக்களுக்கான சமூக சமத்துவம், அமைதி, வளம் ஆகியவற்றுக்கு இட்டுச்செல்லும் என்று நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ’நன்றி சகோதரரே’ என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் பதில் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'மனசாட்சிப்படி' என்று சொல்லி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பினராயி விஜயன்