ETV Bharat / bharat

Export Preparedness Index 2022: குஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்! - மாநிலங்களின் ஏற்றுமதி திறன்

நிதி ஆயோக் வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான "ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு" தரவரிசையில், குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

Tamil Nadu
தமிழ்நாடு
author img

By

Published : Jul 18, 2023, 2:15 PM IST

டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான "ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு" தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பு நேற்று (ஜூலை 17) வெளியிட்டது. இந்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு என்பது, மாநிலங்களின் ஏற்றுமதித் திறன் மற்றும் செயல் திறனின் அடிப்படையில், அவற்றின் தயார் நிலையை மதிப்பிடுவதாகும். இந்த குறியீடு மாநிலத்தின் ஏற்றுமதி கொள்கை, வணிக சூழல், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல் திறன் ஆகிய நான்கு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடலோர மாநிலங்கள், மலைப்பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட பிரிவுகளில், 2022ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்றுமதியைப் பொருத்தவரை மலை மாநிலங்களை விட கடலோர மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு தர வரிசையில், கடலோர மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்த ஏற்றுமதி தயார் நிலைக் குறியீடு தரவரிசையிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 80.89 புள்ளிகளைப் பெற்று தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடலோர மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு தரவரிசையில், தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிரா 78.20 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கர்நாடகா 76.36 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், குஜராத் 73.22 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் படித்துள்ளது.

கடலோர மாநிலங்களில், ஆந்திரா 59.27 புள்ளிகளையும், ஒடிஷா 58.84 புள்ளிகளையும், மேற்கு வங்கம் 53.57 புள்ளிகளையும், கேரளா 44 புள்ளிகளையும் பெற்றுள்ளன. மலை மாநிலங்களின் தர வரிசையில், உத்தரகாண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இமாச்சலப்பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்கள் அல்லது சிறு மாநிலங்கள் பிரிவில், கோவா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லடாக் ஆகியவை முறையே இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. முதல் இரண்டு ஆண்டுகளிலும் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் குஜராத் மாநிலமே முதலிடம் பிடித்தது. 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

  • This remarkable feat showcases the strength of our industrial ecosystem and the visionary policies of our #DravidianModel Government. Kudos to all stakeholders for their hard work and dedication. We remain committed to fostering an environment conducive to growth and prosperity.… https://t.co/p2hsMBfWG0

    — M.K.Stalin (@mkstalin) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த குறிப்பிடத்தக்க சாதனை நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் வலிமையையும், நமது திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு கொள்கைகளையும் காட்டுகிறது. அனைத்து பங்குதாரர்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் எனது பாராட்டுகள். வளர்ச்சி மற்றும் செழுமைக்கு உகந்த சூழலை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.