சண்டிகர்: ஆசிரியர்கள் தினத்தையொட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காணொலி வாயிலாக ஆசியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஆசிரியர்களுக்கு சில மகிழ்ச்சியான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதில், பள்ளிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
18 முதல் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மற்றும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த முக்கிய பங்காற்றிவரும் ஆசிரியர்களுக்காக பஞ்சாப் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்"