இந்தியா - அமெரிக்கா தூய எரிசக்தி இலக்கு என்ற பெயரில் இரு நாடு இணைந்து கால நிலை மாற்றம் தொடர்பாக கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதில் இந்தியா சார்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவும் அமெரிக்கா சார்பில் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது, 'இந்த கருத்தரங்கு இரு நாட்டின் கூட்டுறவை பறைசாற்றுவதுடன் கால நிலை மாற்றம் குறித்து இரு நாடுகளின் செயல்பாடுகளையும் உலகிற்கு காட்டுகிறது.
புவி வெப்பத்தை 1.5 டிகிரிக்கு குறைவாக வைத்திருப்பது உலக நாடுகளின் கடமை. அப்போதுதான் வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி போன்ற பேரிடர்களை நாம் தவிர்க முடியும்.
எனவே, உலக நாடுகள் மாற்று எரிசக்தியில் முதலீடு செய்ய வேண்டிய காலமிது' என்றார்.
நிகழ்வில் பேசிய ஜான் கெர்ரி 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் மாற்று எரிசக்தி என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. அதில், 100 ஜிகாவாட் இலக்கை இந்தியா இப்போதை அடைந்துள்ளது பாராட்டத்தக்கது எனக் கூறினார்.
இதையும் படிங்க: கோவிட்-19 இரண்டாம் அலை காலத்தில் கார்ப்பரேட்கள் ரூ.1,600 கோடி உதவி