குலு (மத்தியப் பிரதேசம்) : இமாச்சலப் பிரதேசத்தின் பூந்தர் விமான நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் சிங், முதலமைச்சர் பாதுகாப்பு அலுவலர் ஒருவருடன் மோதிக்கொண்டார்.
முன்னதாக இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருவரும் திடீரென மோதிக்கொண்டனர். மாவட்ட எஸ்பி, முதலமைச்சர் பாதுகாப்பு அலுவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதையடுத்து முதலமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் பதிலுக்கு கௌரவ் சிங்கை காலால் எட்டி உதைத்தார். இதைப் பார்த்த சக அலுவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
எனினும் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன. இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை விமான நிலையத்தில் வரவேற்க சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சஞ்சய் குண்டு உத்தரவிட்டார். அதன்படி முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!