டெல்லி : அகமதாபாத் - அயோத்தி இடையே நேரடி விமான சேவை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தொடங்கி வைத்தார். ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தியில் மகாரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
இந்நிலையில், அயோத்தி - அகமதாபாத் இடையிலான நேரடி விமான சேவையை காணொலி காட்சி மூலமாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடக்கி வைத்தார். இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அடுத்த ஒரு மாதத்தில் உத்தர பிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் தொடங்கப்படும் என்று கூறினார். அசம்கார்க், அலிகார்க், மொரதாபாத், சித்ரகோட் மற்றும் ஷ்ரவஸ்தி நகரங்களில் புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்க உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அயோத்தியில் இருந்து டெல்லிக்கு இன்று (ஜன. 11) முதல் விமான சேவையை தொடங்கிய உள்ள இண்டிகோ விமான நிறுனம், தொடர்ந்து அகமதாபாத் - அயோத்தி இடையே வாரத்தில் மூன்று முறை விமான சேவையை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஜனவரி 15ஆம் தேதி முதல் மும்பை - அயோத்தி இடையே விமான சேவையை இயக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. தொடர்ந்து பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி விமான நிலையத்தில் 100 தனியார் விமானங்கள் வரக் கூடும் என எதிர்பார்க்கபடுவதாக கூறினார்.
ஏறத்தாழ 70 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு உள்ள அயோத்தி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 600 பயணிகள் வரை கையாள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் 3 ஆயிரம் பயணிகளை கையாளக் கூடிய வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மெஹபூபா முக்தி சென்ற கார் விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!